தேனி-விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி உணவக கடையில் மோதி விபத்து.

கம்பமெட்டில் இருந்து மேகமலைக்கு விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை உணவக கடையில் மோதி விபத்து
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேகமலைக்கு விறகு கட்டையில் ஏற்றி சென்ற லாரி உணவு கடையில் மோதி விபத்து ஏற்படுத்திகளிமேட்டுப்பட்டியை சேர்ந்த அக்பர் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி, பேருந்து நிலையம் அருகே வந்தபோது கம்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான நின்றிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் உள்ளே இருந்த வழக்கறிஞர் மற்றும் தொக்கம் எடுக்க வந்திருந்தவர்கள் தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மீதும் மோதியது. மூன்று பேர் கேரளாவை சேர்ந்த ஒருவர் என 5 பேர் காயங்களுடன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காருக்கு பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொக்கம் எடுக்க வந்திருந்த நபர்களின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.இந்த விபத்தில் தொக்கம் எடுக்க வந்திருந்த கேரளா இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.