தேனி–விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா.

தேனி கிழக்கு மாவட்டம் தேனி ஒன்றிய உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அங்கீகார விழா தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சியானது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அனைவரும் மத்தியில் எடுத்துக் கூறியும்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வாழ்க்கை வரலாறையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைத்தனர்,இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது,அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகளும் வழங்கி சிறப்பித்தனர்,இந்நிகழ்வானது தேனி ஒன்றிய செயலாளர் ராஜதுரை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ரபீக் கொடியேற்றி வைத்து பேசினார் மற்றும் கருத்தப்பாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் மாயன் இந்திரா காலனி முகாம் செயலாளர் முன்னிலையில் முப்பெரும் விழா நடைபெற்றது,உடன் இந்திராமதி தலைமை ஆசிரியர் Rtd(அரசு மேல்நிலைப்பள்ளி) மரக்கடை செல்வராசு மாவட்ட துணை செயலாளர், செல்லத்தம்பி மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஆண்டவர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர், வெற்றி, சண்முகம், நகர துணை செயலாளர், குருசாமி நகர செயற்குழு உறுப்பினர், தர்மராஜ் பெரிய தனம், மலையான் சேர்வை, மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்திரா காலனி முகாம் பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இறுதியாக பால்பாண்டி நன்றியுரை வழங்கினார் ..