தேனி-மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர்போராட்டம்

தமிழ்நாடு – தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர் போராட்டம் !!! இவற்றை கண்டுகொள்ளாத தமிழக அரசும் ! தேனி மாவட்ட நிர்வாகமும் ! தேனி மாவட்டம், தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் கடந்த மூன்று வருடங்களாக செயல்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.. ஏன் ? …….எதற்காக ? இதனால் இங்கு வரக்கூடிய ஏழை எளிய மற்றும் பொருளாதார ரீதியாக இருக்கும் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் ! …. இங்கே உள்ள அம்மா உணவகம் அல்லது மலிவு விலை உணவகத்தை மீண்டும் செயல்படுத்த கோரி மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் …ஆனால் தமிழக அரசும் , தேனி மாவட்ட நிர்வாகமும் இவற்றை கண்டு கொள்ளாமல் , மெத்தனப் போக்கையே காட்டுகிறது … இந்த பிரச்சினையினை மேலும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் இருக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக எமது தொடர் போராட்டமாக உண்ணா நிலை அறப்போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் .. மேலும் இப் போராட்டமானது பெரும் திரளாக தலைவர் நிறுவனர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் ஆணைப்படி தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டமாக நடைபெறும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர் ! இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உடனடியாக அரசும், மாவட்ட நிர்வாகமும் துரிதமான போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா ? என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகை ஊடகங்களும் எதிர்பார்க்கின்றனர் !!!….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி