Others
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம்..

தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இன்று (06.08.2014) உலக தாய்ப்பால் வாரம் சிறப்பாக நடத்தப்பட்டது.நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட நல அலுவலர் திருமதி.கலைவாணி கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பெரியகுளம் நகர்ப்புற அரசு சுகாதார நிலைய மருத்துவர் சாந்தி, தேனி மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் சுருளிவேல், காமராஜ், சுந்தர், எவிடன்ஸ் சதீஷ்குமார், மக்கள் நலச் சங்கத்தின் ராஜவேல், செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் ஒன்றியம் சார்பில் திரு.சுந்தர் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்
