தேனி-மாபெரும் ரத்ததான முகாம்.


வணக்கம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சின்னமனூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் 09.10.2024 அன்று சின்னமனூர் பிரமலைக்கள்ளர் சமுதாய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வடுகபட்டி மனிதநேய மருத்துவர் டாக்டர்.சி.செல்வராஜ் கலந்து கொண்டார். சின்னமனூர் திரு.துர்கா வஜ்ரவேல் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.இந்தியன் ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் மற்றும்செயலாளர்க.சுருளிவேல்ஆகியோர்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டனர். சின்னமனூர் ரோட்டரி கிளப் செயலாளரும் ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினருமான திரு.பி. கொடியரசன் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார். சின்னமனூர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் திரு.எல்.கே.சிவமணி திரு.முத்துச்சாமி திரு.நாட்ராயன், திரு.காமராஜ் மற்றும் திரு.கண்ணன் ஆகியோர் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.இரத்த வங்கி மருத்துவ அலுவலர் திருமதி.பாரதி அவர்கள் தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.முகாமில் 51 ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள். அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.நன்றி. ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்.