தேனி–போடிநாயக்கனூர் புதியபேருந்து நிலையஅவலநிலை…?
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகே பொது மக்களுக்கு இடையூறாக ஆட்டோ மற்றும் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்கள் மொத்தமாக நிறுத்தப்படுகிறது. இத்தகைய நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் போடி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.ஆதலால் பேருந்து நிலையத்திற்க்குள் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை உரிய முறையில் நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்……….. இவற்றை உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா ? பொறுத்து இருந்து பார்ப்போம்….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி