தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டநிகழ்வு
*கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடுக்கி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்ககருத்தரங்க கூட்டத்தில்பங்கேற்பு*நடைபெற்ற 18 ஆம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திண்டுக்கல் இருந்து சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு குரல் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இடுக்கி மாவட்ட எம்.பி டீன் குரியன்கோஸ் குமுளி வணிக சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தினர்.பின்னர் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் 18 ஆவது பாராளுமன்ற கூட்டத் தொடரில் மூன்று கோரிக்கைகளை வைத்து இறுதிவரை போராடுவேன் என கூறியிருந்தார். திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை, .தேவாரம் இருந்து சாக்குளத்துமெட்டு பாதையை அமைப்பது , ஆண்டிபட்டி இருந்து உசிலம்பட்டி வரை வழித்தடங்களில் புதிதாக மேம்பாலங்கள் பைபாஸ் உருவாக்கப்படும் ஆகிய மூன்று கோரிக்கையை முன்வைத்து கூறினார்.பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் தமிழ்நாட்டில் கூட பாராட்டாத நிலையில் கேரள வணிகர் சங்கத்தின் சார்பாக பாராட்டியதற்க்கு நன்றி தெரிவித்தார்.தொடர்ந்து தேனி திண்டுக்கல் இடுக்கி வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் …..