தேனி — ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு.


தேனி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு 21.11.2023 அன்று தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ப.இந்திராணி அவர்கள் தலைமை தாங்கினார்.தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.அ. வசந்தா அவர்கள் நிகழ்வைத் துவக்கி வைத்தார்.
முதல் அமர்வாக ரெட் கிராஸ் வரலாறு மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் செயல்பாடுகள் சார்ந்து பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.ஏ.ராஜகுரு அவர்கள் கருத்துரை வழங்கினார்.இரண்டாவது அமர்வில் இன்றைய மாணவர்களும் மனித நேயமும் என்ற தலைப்பில் தேனியைச் சேர்ந்த கே.எஸ்.கே நடேசன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மூன்றாம் அமர்வாக பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைவுகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட அமைப்பாளர் திரு.க.சுருளிவேல் அவர்கள் விளக்கம் அளித்தார்.கருத்தரங்கில் தேனி மாவட்டத்தில் உள்ள 140 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.