தேனி–சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினம்.

Greetings from Indian Red Cross Society,Theni District.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தேசிய இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 15 பெண்கள் உட்பட 60 இளைஞர்களுக்கு அடிப்படை முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை சார்ந்த செயல்முறைகளுடன் கூடிய விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.மாநில ரெட் கிராஸ் மையத்திலிருந்து வருகை தந்த திரு.பெஞ்சமின் அவர்கள் பயிற்சிகளை வழங்கினார் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன்,
துணை சேர்மன் திரு.வி.மகாராஜன்,செயலாளர் திரு.கே.சுருளிவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மணி, சிதம்பரநாதன், சிறுமலர், அழகேந்திரன், இராணி, அம்பாள், பாண்டி மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை அட்மின் திருமதி.மீனாம்பிகை மற்றும் ஜோதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நன்றி. வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

