தேனி–ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்..?



தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! உடனடியாக கடுமையான நடவடிக்கை எடு!!! ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்…??? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊக்குனராக பணிபுரிந்து கொண்டு காளியம்மன் கோவில் தெருவில் கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வசிக்கும் பௌசியா பானு என்பவர் அரசு வழங்கிய பசுமை வீட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். இதுவரை வீட்டு வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை முறையாக செலுத்தி வந்தநிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏதோ முறைகேடு சம்மந்தமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவரின் சம்சுல்குதா கணவர் முகமது ரபீக் என்பவர் பௌசியா பானு வீட்டில்லும் நடைபாதையின் இருபுறமும் உள்ள வீட்டு நபர்களை தூண்டி விட்டு நடை பாதையை சுவர்கள் வைத்து அடைத்து விட்டார்.அதன்பிறகு அவர் வீட்டிற்க்கு குடிதண்ணீர் இணைப்பையும் துண்டித்து விட்டும் அந்த பெண்ணை பெண் என்று கூட பாராமல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முகமதுரபிக் என்பவர் கட்டையை கொண்டு தாக்க வந்துள்ளார் என ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் 16.06.2024 அன்று புகார் மனு அளித்தும், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் அளிக்கப்பட்டும், தற்போது இதுவரைக்கும் யாரும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவேஇல்லை…… எனவே தமிழ்நாடு அரசும், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகமும் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடைபாதை மற்றும் குடிதண்ணீர் கிடைத்தி டவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் MSP ராஜ்குமார் மாவட்ட பொது செயலாளர் ஏஐடியுசி தேனி மாவட்டக்குழு மற்றும் வீ. பாண்டி மாவட்ட தலைவர் மற்றும் இந்த பகுதி பொதுமக்கள் சார்பாகவும் கோரிக்கை வைக்கின்றனர்!!!….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி மற்றும் அரசு செய்தி பெரியகுளம் தாலுகா ரிப்போர்ட்டர் – ஞானவேல்.