தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-உலக சுற்றுச்சூழல் தினம்..சிறப்பு செய்தி.


தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வீரபாண்டி பேரூராட்சி இணைந்து இன்று 05.06.2024 உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வழியில் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் தூய்மைப்படுத்தும் பணியும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்றது.இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கௌரவச் செயலாளர் க.சுருளிவேல் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ரெட் கிராஸ் சேர்மன் NRT.R. தியாகராஜன் அவர்கள் தலைமை வகிக்க வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் திருமதி.கீதா சசி அவர்கள் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு LDITOR கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் டி.பி.விஸ்வநாதன் அவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.நிகழ்வில் ரெட் கிராஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் காமராஜ், சிதம்பரநாதன், முகமது பாஷா, முகமது ஷேக் இப்ராஹிம், ஆசிரியை சிறுமலர், இராஜேந்திரன், கம்பம் ஒன்றிய நிர்வாகிகள் சுருளிப்பட்டி அன்பு ராஜா, ஜி.பாண்டி. சின்னமனூர் ஒன்றிய நிர்வாகிகள் கொடியரசன், முத்துசாமி, பெரியகுளம் பகுதி நிர்வாகி சுந்தர். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சித்ரா தேவி. மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாஸ்கரன், பேருராட்சி மேற்பார்வையாளர் குபேந்திரன், சின்னமனூர் மலை இராணுவ பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு தூய்மை பணியை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்வை சிறப்பித்தனர். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்