தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி….

செங்கல்பட்டுமாவட்டம்மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பிரதமர் மோடியின் அருகில் அதிமுக பொதுச் செயலாளர்எடப்பாடிபழனிசாமிஅமர்ந்திருந்தார்.மேலும் இந்த மேடையில், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி தலைவர் திருமாறன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்ஆகியோர்பிரதமர்மோடியுடன்முதல்வரிசையில்அமர்ந்திருந்தனர்.என்.டி.ஏகூட்டணிபொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்ற கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு: அதிமுக கடந்த 2021ல் 33.29% வாக்குகளைப் பெற்றது. அந்தக் கட்சியானது 1 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகளைப் பெற்றது. மொத்தம் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2.62 வாக்கு சதவீதத்தைப் பெற்றது.தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 3.80% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. 5 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சுமார் 2.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. இந்தக் கட்சி 165 தொகுதிகளில் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்தது. கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில் அங்கு மட்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் வெற்றி இல்லை. மொத்தமாக 0.1%க்கும் குறைவான வாக்கு சதவீதம் பெற்றது.2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக – பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக தலைமையிலான NDA கூட்டணி சார்பில் போட்டியிட்டது. கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு 48.57% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. புரட்சி பாரதம் கட்சி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் 0.2%க்கும் குறைவு. ஆகமொத்தம், அதிமுக கூட்டணி கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுமார் 44% வாக்குகளைப் பெற்றுள்ளன. தற்போது 2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவப்போகும் சூழலில் 45% வாக்குகள் கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது. எனவே, இந்தக் கூட்டணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.