தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப்பொதுக்குழுகூட்டத்தில்நடிகர்சங்கதலைவர்நாசர்பொதுச்செயலாளர் விஷால்,பொருளாளர்கார்த்தி,துணைதலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்றும் நடிகர் நாசர் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி பேசியபோது, ” நடிகர் சங்கத்தின் சார்பில்2019லேயேவிசாகாகமிட்டியைஉருவாக்கிவிட்டோம்.அதன்பிறகுசிலபுகார்கள்வந்தது.அதைநாங்கள்தீர்த்தும்வைத்திருக்கிறோம். தற்போது சில விஷயங்கள் (ஹேமா கமிட்டி) பூதாகரமாகி இருக்கும் நிலையில், நாங்கள் இன்னும் விசாரணைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோம். இந்த கமிட்டியில்நடிகர்,நடிகைகள்மட்டுமன்றியார்வேண்டுமானாலும் புகார்கொடுக்கலாம். வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ-வை சார்ந்த சிலர் இந்த கமிட்டியில் இருக்கின்றனர். புகார் கொடுப்பதற்கு நம்பரையும், இமெயில் ஐடி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறோம். எந்த ஒரு தயக்கமும் இன்றி நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு புகார்அளிக்கலாம். இனிமேல்எந்தஒருஅத்துமீறலையும் யாரும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துமீறல்களில் ஈடுபட்டுதவறுசெய்துபுகாருக்குஉள்ளானவர்கள், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். 5ஆண்டுகள் சினிமாவில் நடிக்க அவர்களுக்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைக்க உள்ளோம். நடிகர் சங்கம் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்பதை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். அதனால் யாரும் பயப்பட வேண்டாம்” என்று ரோகிணி கூறியிருக்கிறார்.
