திமுக உட ன் காங்கிரஸ் கட்சியின் டிமாண்ட் தான் என்ன…?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுகதீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தடிஆர்பாலுதலைமையிலானகுழுஅமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், அ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை வழங்கியது.அதேநேரம் கடந்த டிசம்பர் மாதம் முதல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்து காத்திருந்தது. ஆனால் திமுகவோ காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்காமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் கட்சியின் டிமாண்ட் தான் என தகவல் வெளியானது. ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வழங்க வேண்டும், கடந்த முறையை விட கூடுதல் தொகுதுகள் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. ஆனால் திமுக தரப்போ காங்கிரஸ் கட்சி கோரிய ஆட்சியில் பங்கும் கொடுக்க முடியாது. கூடுதல் தொகுதிகளும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.இதனால் திமுக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மறுத்திருந்தார். இந்த நிலையில் எப்போது காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த திமுககுழுதலைவர்ஸ்டாலினிடம்தங்களதுகோரிக்கைகளைஎடுத்துசெல்வோம்எனதெரிவித்துள்ளது.இதனையடுத்துசெய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளோம். அவர்களும் ஆலோசித்து சொல்வதாக கூறியுள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை ஒரு இடம் தருவதாக முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி இயற்கையான கூட்டணி சிதைக்கநினைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக கூறினார்.மதவாதிகளை விரும்பாத கூட்டணியாக இந்த கூட்டணி உள்ளது. பாஜக ,அதிமுகவிற்க்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை உறுதியாக உள்ளோம் எனவும்தெரிவித்தார்.தவெகஉடன்காங்கிரஸ்பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கேயும் தவெகவுடன் பேச்சுவார்த்தை என கிரிஷ் சோடங்கர் பேசவில்லை. எனவே கூட்டணி தொடர்பாக தவறாக பேசினால் மான நஷ்ட வழக்கு போடுவோம்எனவும் செல்வப்பெருந்தகை கூறினார்.இதையடுத்துபேசியகிரிஷ்சோடங்கர்பேச்சுவார்த்தைசுமுகமாகநடைப்பெற்றது. எங்கள்விருப்பத்தைதிமுககுழுவிடம்கூறியுள்ளோம்என தெரிவித்தார்.