Others
தாளவாடியில் யானைகள் முகாம் பீதியில் மலை கிராம மக்கள்..?
ஈரோடு மாவட்டத்தில் சத்தி புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி செல்வது வழக்கம்.இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டு சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை கூட்டம் நேற்று மல்லன்குழி ரோட்டை கடந்து சென்றது. யானை கூட்டங்கள் சாலையை கடந்து செல்வதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாளவாடி மலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டு சுற்றி வருவது மலை கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்