Others
தாளவாடி அருகே லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை…..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுயானைகள் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள காட்டு யானைகள் அவ்வப்போது அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற லாரியை திடீரென வழிமறித்த ஒற்றை காட்டு யானை லாரியில் கரும்பு உள்ளதா என சோதனை செய்தது. இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை லாவகமாக ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்