fbpx
Others

தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே
சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

கோபி மதுவிலக்கு போலீசார் தாளவாடி அருகே உள்ள மரியபுரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆணும், பெண்ணும் சாராயம் விற்று கொண்டிருந்தனர் இதனால் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தகோவிந்தராஜ்(வயது43),ரத்தினமேரி(39)ஆகியோர்என்பதுதெரியவந்ததுது.அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.  Didt Reporter.Suresh kumar.

Related Articles

Back to top button
Close
Close