fbpx
Others

தற்காலிக பொறுப்பு டிஜிபி–உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..

தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்ததற்கு எதிராக மனித உரிமைகள்DGP ips செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில் தமிழகஅரசு விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில் டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) தொடர்ந்த வழக்கு காரணம் என்று கூறியது. இதையடுத்து நிரந்தர டிஜிபியைவிரைந்துநியமிக்கஉரியநடவடிக்கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டனர்.மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், தற்காலிக பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தமிழகத்தில் டிஜிபியாக பதவிவகித்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபிக்கான பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-க்கு அனுப்பியிருக்க வேண்டும். யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று ஏற்கெனவே பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் தற்போது தமிழக அரசு தற்காலிக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை என்பதால், தமிழகத்தில் தற்காலிக டிஜிபியை நியமித்துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி, ‘தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, ‘டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடியிருந்தார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.

Related Articles

Back to top button
Close
Close