Others
தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுள்ளார்…
“சீனியாரிட்டியைத் தாண்டி தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்ற நிகழ்வை தமிழ்நாட்டின் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் (31ஆம் தேதி) ஓய்வு பெற்றார். இதனால், காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமன், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் எப்போதுமே இல்லாத வகையில், டிஜிபி ஓய்வு பெற்றதும் அந்தப் பதவிக்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு டிஜிபி பொறுப்பேற்ற பின் குறைந்தபட்சம் அவரது பதவி காலம் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.1968ம் ஆண்டு மே 8-ம் தேதி நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். யூபிஎஸ்சி தேர்வில் 1994-ம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தபோது தான் காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார். மேலும் ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளின் முக்கிய வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமனுக்கு தற்போது சட்டம் – ஒழுங்குப் பிரிவுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார். டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பொறியாளரான இவர் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 1990ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். மன்னார்குடி உதவி காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாநகர காவல் ஆணையர், மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு மண்டல இயக்குநர், உளவுபிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை கமிஷனர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்திருந்த இவர் இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.ஆக.31ம் தேதியோடு சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அவரைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியான வெங்கட்ராமனும் முதல்வரை சந்தித்தார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதால் அவரும் முதல்வரை சந்தித்து பேசினார்.இந்தநிலையில் இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலுடன், சைலேஷ் குமார் யாதவ் இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபச்சார விழா நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் தமிழக காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தி அனுப்பி வைக்க உள்ளனர்.