Others
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்….

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.- சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரை, சென்னையை அடுத்த ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் இன்று மாலை நடைபெறுகிறது. பாரத்தை இறக்கி வைத்தார்களா..? பேரத்தை பேசினார்களா..? விஜயகாந்த் விரும்பாத கூட்டணியை பிரேமலதா அமைத்துள்ளார்..! என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம். திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு சீமான் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.