Others
தமிழ்நாடுவணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளையனின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.தற்போது, அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
)