
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை, அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களை மிரட்டியும் உருட்டியும் வரும் போக்கினை பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்து கொண்டதை பார்த்தேன் எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.