fbpx
Others

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்–தொடர் காத்திருப்பு போராட்டம்….

*தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது*

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்தொடர் காத்திருப்பு போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வருகிறதுகிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலகமாக அமைத்து தரவலியுறுத்தி,கிராம நிருவாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோரியும்கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30சதவீதம் என்பதிலிருந்து 50சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும்.இடம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்த பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் …..

Related Articles

Back to top button
Close
Close