fbpx
Others

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் கைது..,

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் உம்மா தலைவர் பாட்ஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கியதற்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்படி இருந்தும், கோவை மாநகரில் போக்குவரத்தை நிறுத்தி, இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 20-டிசம்பர் தினத்தை கருப்பு தினமாக அறிவித்து பேரணி நடத்தப்போவதாக பா.ஜ.க அறிவித்தது.இந்நிலையில் கோவை வந்தஅண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசும்போது,   கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வைக்கவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டினார். இப்படிப்பட்ட தீவிரவாதியை இங்கு உள்ள கட்சியினர் பாஷாவை தியாகி போல் கருதுவதாகவும். இதுபோன்ற தீவிரவாதிகளை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும் கோவை மாவட்டத்தில் என்.ஐ.ஏ வருவதற்கு பரிசீலனை செய்வதாக அமித்ஷா தெரிவித்ததாகவும். கோவை மாவட்ட மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோவை மாவட்டம் நரேந்திர மோடியின் நேரடி பார்வையில் இருப்பதாக அவர் கூறினார்.அண்ணாமலை பேசி முடித்ததும் பேரணி துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காந்திபுரம் கிராஸ்கட் சாலை வழியாக சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் வழியே செல்ல திட்டமிடப்பட்டது.பேரணி தொடங்கியவுடன் காந்திபுரம் அருகே, அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி பேரணி நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close