தமிழக அரசைகண்டித்து நாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்..
தினமும்கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைபொருட்கள்விற்பனையை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்துநாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இணைந்து திருவள்ளூர் மாவட்ட நாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி வணிகர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முன்னதாக செங்குன்றம் பஜாரிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். காமராஜர் சிலையிலிருந்து சிலம்பாட்டம், வானவேடிக்கை, பேண்டுவாத்தியமேளதாளங்களுடன் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். மண்டப நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி கொடியை கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மண்டப வாயிலில் இருந்து சமாதான புறாக்களை பறக்க விட்டார்.மாநாட்டிற்கு தமிழ்நாடு நாடார் பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளருமான கும்மிடிப்பூண்டிகே.காமராஜ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர்பூவை.எஸ்.ஜெயக்குமார்,மாவட்டசெயலாளர்பேட்டை.பி.முருகேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.முருகக்கனி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவைதலைவர்ஆர்.செல்வகுமார்,மாவட்டசெயலாளர்கே.பி.நல்லதம்பி,பெருந்தலைவர்மக்கள்கட்சிதிருவள்ளூர்கிழக்குமாவட்டதலைவர்எடப்பாளையம்.ஆர்.செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர்திருவள்ளூர்எஸ்.குமாரசாமிஆகியோர்முன்னிலைவகித்தனர்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி செயலாளர் குலசை.எம்.முத்துலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பரமேஸ்வரி முருகன், தனலட்சுமி, செந்தூர்கனி காமராஜ், மாநில மகளிர் அணி துணைத் தலைவி விக்டோரியா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர். புழல்ஏ.தர்மராஜ் மாநாட்டு தொடக்க உரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மற்றும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர்கள் கல்பாக்கம் த.மோகன், எஸ்.எம். குருசாமி நாடார், மாநில செயலாளர் M.V.M.ரமேஷ்குமார், பொருளாளர் பெ.பிரபாகரன், தலைமைநிலையசெயலாளர்ஆர்.சிவக்குமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், ஆவடி நாடார்சங்கத்தலைவர்ஆர்.கே.எம்.துரையரசன்ஆகியோர்வாழ்த்துரைவழங்கினார்கள்.மாநாட்டில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் வி. ஆனந்தராஜ், செயலாளர் மயிலை பெ.சந்திரசேகர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, சென்னை மண்டல தலைவர் பட்டுமேடு அருணாசல மூர்த்தி, இந்திய நாடார் கூட்டமைப்பின் தலைவர் த.பத்மநாபன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், அகில இந்திய நாடார்கள் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம் கார்த்திகேயன், இந்திய நாடார்கள் பேரமைப்புத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன், என். எம். சேரன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ், சிம்மப்பேரவை தலைவர் இராவணன் இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் மாநாட்டுதீர்மானத்தில்தமிழ் நாட்டில் பனைத்தொழிலை மட்டுமே நம்பிவாழும் 10 லட்சம் பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட பதநீர், கள் இறக்கி விற்பதற்கான தடையை முற்றிலுமாக நீக்க வேண்டும் மேலும் கள் இறக்கி விற்கும் உரிமையை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்.தினந்தோறும் நடந்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், போதைப்பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறது.
2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பது.தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டை அழியாமல் பாதுகாக்கும் விதமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிலம்பம் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும். அதேநேரத்தில் சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்களை பாதுகாக்க சிலம்பம் விளையாட்டிற்கென தனியாக “சிலம்ப வளர்ச்சி வாரியம்” அமைத்து சிலம்ப விளையாட்டையும் சிலம்ப ஆசான்களையும் பாதுகாத்திட வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதது.உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை செயலாளர் கே.பி. நல்லதம்பி நன்றி உரையாற்றினார்.நிகழ்ச்சியைஎஸ். எம்.யுவராணி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

