தமிழக அரசுடன். களம் இறங்கும் கேரளா….SPL NEWS…
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மதுரையில் தமிழ்நாடு வளர்கிறது என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மொத்தம் ₹36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக தமிழக அரசு கூறியிருந்தது. இதில் கேரள எல்லையை ஓட்டியுள்ள தேனி மாவட்டம் பெரிய முதலீடுகளைப் பெற்றிருந்தது.அதன்படி கொச்சியை தலைமையிடமாக கொண்ட என்எஸ்டி குழுமத்தின் அங்கமான எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் தான் தேனி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு ஆகும். இந்த நிறுவனம் மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் அச்சுச் சுற்றுப் பலகைகள் தயாரிக்கும் ஆலையை அமைக்க ₹2,270 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடு ஒப்பந்ததிற்கு நேற்று தமிழக அரசின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.தேனி மாவட்டத்தை பொறுத்தவரை முற்றிலும் மலைகள்காடுகள்சூழ்ந்தமாவட்டமாகஇருக்கிறது.இங்குவிவசாயம்தான்பிரதானதொழிலாக இருக்கிறது.போதியவேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கணிசமானமக்கள்கேரளாவிற்கு தேயிலை பறிக்க, ஏலக்காய் பறிக்க செல்கிறார்கள். அதேபோல் ஏராளமான மக்கள் கோவை, திருப்பூர் மற்றும் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க போய்விட்டனர்.தொழிற்சாலைகள் சரிவர இல்லாத காரணத்தால் தேனி மாவட்டத்தில் மக்கள் இடம் பெயர்வு வேகமாக நடந்து வந்தது. இந்நிலையில்தான்கொச்சியில்உள்ளஎன்எஸ்டிகுழுமத்தின்அங்கமானஎஸ்எப்ஓடெக்னாலஜிஸ்நிறுவனம்தேனிமாவட்டத்தில் ஒரு பெரிய மின்னணு உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றிலேயே இல்லாத அளவாக சுமார் ₹2,270 கோடி முதலீடு செய்கிறது. இதில் 5500 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற போகிறார்கள்.இங்கு பிரிண்டெட் சர்க்யூட் போர்டுகள், கனெக்டர்கள் சென்சார்கள் மற்றும் பிற மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலை தேனியில் அமைய காரணம். கேரள எல்லையில் இருப்பது தான். இதனை ஆரம்பிப்பது கேரள நிறுவனம் தான். கொச்சியை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்திற்கு நிர்வாக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இது மிகவும் வசதியான இடமாக தேனி இருப்பதால், நிறுவனம் அமைகிறது. .இந்த ஆலை தேனி
மாவட்டத்தில் அமைவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குச் சில முக்கிய காரணங்களும் உள்ளது. இந்த ஆலை ஒரு புதிய பசுமை வளாகத் திட்டமாக அமைகிறது. சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலை அமைக்கப்பட இருக்கிறது. பொதுவாக தேனி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகமாக இருப்பதால், ஆலையின் மின் தேவையை இயற்கை எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய நிறுவனம்திட்டமிட்டிருக்கிறது.பற்றாக்குறைக்குசோலாரும்பயன்படுத்தக்கூடியசாதகமாக இடமானஇருக்கிறது.எஸ்எப்ஓடெக்னாலஜிஸ்நிறுவனம்அடுத்தஇரண்டுஆண்டுகளுக்குள்உற்பத்தியைத்தொடங்கவும்,ஆறுஆண்டுகளுக்குள்முழுஉற்பத்தித்திறனைஎட்டவும்நிறுவனம்இலக்குநிர்ணயித்துள்ளது.முன்னதாக கேராளவின் புகழ் பெற்ற ஈஸ்டன் மசாலா நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலை தேனியில்இருக்கிறது.அதனைபின்பற்றிஅடுத்தடுத்துகேரளநிறுவனங்கள் தேனியில்முதலீடுசெய்துவருகின்றனர்.இதனிடையேதேனிமாவட்டத்தில்சிறுமற்றும்குறுந்தொழில்முனைவோருக்குஉதவும்வகையில்ஒருபொதுப்பொறியியல்பூங்காஅமைக்கதமிழக அரசுமுடிவுசெய்துள்ளது.அதேபோல்தேனிமாவட்டம்விவசாயம்செழித்தபகுதிஎன்பதால்,அங்குவிளைபொருட்களைமதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஒரு பிரம்மாண்டமான உணவுப்பூங்காஅமைக்கப்படும்எனமுதல்வர்ஸ்டாலின்அறிவித்துள்ளார்.இதுதவிரரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்நிறுவனம்தென்மாவட்டங்களில் உயிரி எரிசக்தி துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் ₹11,760 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதி தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைய போகிறது.