fbpx
Others

தஞ்சை தரணியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்..

தஞ்சை தரணியிலே நடைபெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் R.V.S. ஆயுர்வேத கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் (15.09.2024) ஞாயிறு தஞ்சாவூர், தொம்பன் குடிசை, ராஜ் மஹால் எதிரேயுள்ள திடலில் நடைபெற்றது.மருத்துவ முகாமை, M.ராஜசேகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் மருத்துவ சேவை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் R. வெங்கடசுப்ரமணியன் B.A.M.S.,அவர்களது தலைமையில்,நிறுவன தலைவர் ரா.சம்பத் குமார் அவர்கள் மேற்பார்வையில், நடைபெற்ற இம் மருத்துவ முகாமில்,தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் MBA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்மருத்துவர்.ரா. வெங்கடசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், Dr.S.சுந்தர வடிவேலன்மருத்துவப் பிரதிநிதிகள் S.சுரேஷ், S.முருகானந்தம்,P.ஸ்ரீதர், J.வில்சன், S.சுரேஷ் ராவ்,E. கௌதம்,V. நயநீதம் ஆகியோர்மருத்துவ பணிகளை சிறப்பாக செய்து இருந்தனர்.இம்மருத்துவ முகாமில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I.கண்ணுவாப்பா,மாநில மகளிரணி பொருளாளர் V.மகேஸ்வரி,மாநில இணை ஒருங்கிணைப்பாளர் R.சேகர்,*மாணவர்கள் இரத்ததான சேவைப்பிரிவு மற்றும் தலைமை அட்மின் Aஐயப்பன், நாகப்பட்டினம் நிர்வாகி மணி @ N.சுப்பிரமணியன் உறுப்பினர் பொரவச்சேரி B.சுரேஷ்,மற்றும் தஞ்சை கோபி ஆகியோர் சிறப்பாக பணிகளை மேற்கொண்டனர்.இம் மருத்துவ முகாமில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்,தெற்கு வீதி ரயிலடி, ஆத்துப்பாலம், Maxwell ஸ்கூல்,பாம்பாட்டி தெரு,கீழவாசல் பழைய ராமேஸ்வரம் சாலை, தொம்பன் குடிசை, சிவராஜ் தோட்டம்,ஜெயராம் மஹால், சேவியர் நகர்,கருப்பாய்தெரு, அண்ணா காலனி ,அலமேலு நகர்,ராஜிவ் நகர்,அக்ரீ நகர்,கௌதம் நகர், சோழா நகர்,நாகை ரோடு,ஞானம் நகர் உள்ளே சாய்பாபாகோவில்,கிருஷ்ணாவேணிஅம்பாள் நகர், மீனா நகர் ,பட்டுக்கோட்டை பைபாஸ்கீழவஸ்தசாவடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை செய்து கொண்டனர்.சிகிச்சை
பெற வந்தவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைகளும், டானிக் மற்றும் மருந்து பொருள்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டது.

செய்திகளுக்காக சுரேஷ்

Related Articles

Back to top button
Close
Close