ட்ரம்ப்–ஈரானுக்கு மரணம் உறுதிஎன்றுஎச்சரித்துள்ளார்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், கமேனியை கொன்றது பெரும் குற்றம் என்றும், அதற்காக பழிவாங்காமல் ஓய மாட்டோம் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ள நிலையில், அந்நாட்டு படையினர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் மரணம் உறுதி என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அவரது பேச்சின் முழு விவரத்தை பார்ப்போம்.ஈரான் குறித்து பேசிய அவர், அந்நாடு மிகப்பெரிய தீவிரவாத நாடு என்றும், பல தீவிரவாத அமைப்புகளுக்கு தலைமை தாங்குவதே ஈரான் தான் என்றும் கடுமையாக விமர்சித்தார். ஈரான் மக்களுடன் அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போல், அதை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். ஈரான் ராணுவத் தலைமை முற்றிலும் ஒழிந்துவிட்டதால், இது தான் சரியான சமயம் என்றும்,
சுதந்திரத்திற்காக ஏங்கும் ஈரான் மக்கள் இந்த தருணத்தை பயன்படுத்தி, தங்களுக்கான ஆட்சியை கட்டமைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.தைரியமாகவும், வீரமாகவும் செயல்பட்டு தங்கள் நாட்டை ஈரானிய மக்கள் திரும்பப்பெறவேண்டும்என்றும்அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.தொடர்ந்து பேசிய ட்ரம்ப், கமேனி உயிரிழந்ததை ஈரான் மக்கள் கொண்டாடியதாக தெரிவித்தார். அதனால், தாங்கள் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்றும், அமெரிக்கர்கள் இனி அணு ஆயுதங்கள் மற்றும் ரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை எதிர்கொள்ள வேண்டியது இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.கடந்த 50 ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்றுஇந்தபயங்கரவாதிகள்கோஷமிட்டுதாக்குதல்நடத்திவந்ததாகவும், அந்த அச்சுறுத்தல்கள் இனி தொடராது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.மேலும், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஈரானின் ஆட்சி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்றும், பயங்கரவாத படைகளை வளர்க்கும் ஈரான், அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க முடியாதுஎன்றும்கூறினார்.அந்தஆயுதங்களை வைத்துக்கொண்டு, அவர்களின் தீய விருப்பத்திற்கு இந்த உலகை அடிமையாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய ட்ரம்ப், இலக்கை அடையும் வரை போர் நடவடிக்கைகள் தொடரும் என்றும், அது 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கூறினார்.இதனிடையே, ட்ரம்ப்பின் எந்த பேச்சையும் கேட்க ஈரான் தயாராக இல்லை. தங்களது உச்ச தலைவரின் கொலைக்கு பழிவாங்கும் ஒரே நோக்கில் தான் ஈரான் செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல்தங்கள்தாக்குதல்களைதீவிரப்படுத்திவருகிறது.ட்ரம்ப்பின்பேச்சுவார்த்தை அழைப்பையும்ஈரான்நிராகரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.