Others
டெல்லி முதல்-மந்திரி அதிஷி பிரதமர் மோடியை சந்தித்தார்..
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீனில் வெளியே வந்தபின் பதவி விலகினார். அதன்பின்னர்,ஆம் ஆத்மி கட்சியின்சட்டமன்றகட்சிதலைவராகஅதிஷிதேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்- மந்திரியாகபொறுப்பேற்றார். இந்நிலையில், முதல்-மந்திரி அதிஷி, பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நமது தலைநகரின் நலன்மற்றும்முன்னேற்றத்திற்காக மத்திய அரசுக்கும் டெல்லிஅரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்புஇருக்கும்எனஎதிர்பார்ப்பதாக அதிஷி குறிப்பிட்டுள்ளார்.ஆட்சி நிர்வாகம், அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதுகுறிப்பிடத்தக்கது.