டெல்லி–ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி..
டெல்லியில் இன்று நடைபெறும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சியில்,பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டநினைவுஅஞ்சல்தலைமற்றும்நினைவுநாணயத்தைபிரதமா்மோடிவெளியிடஉள்ளார்.இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: டெல்லியில் உள்ள அம்பேத்கர் சா்வதேச மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆா்எஸ்எஸ்நூற்றாண்டுவிழாகொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக இன்று பங்கேற்கவுள்ளாா்.இந்நிகழ்ச்சியில், ஆா்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட உள்ளார். இதைத்தொடா்ந்து பிரதமர் மோடி உரையாற்றுவார். மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாா் என்பரால் ஆா்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் ஆா்எஸ்எஸ்-ன்வரலாற்றுச்சாதனைகளை கெளரவிப்பது மட்டுமின்றி, இந்திய பண்பாட்டுப் பயணத்துக்கு இந்த அமைப்பு அளித்து வரும் பங்களிப்பு, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அந்த அமைப்பின் தூதுரை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது. இந்த அமைப்பானது ஒழுக்கம், சேவை, கலச்சார விழிப்புணர்வு,சமூகபொறுப்புணர்வுபோன்றபண்புகளைமக்களிடையேகொண்டுசெல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.