Others
டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது ? முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி?

உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா என முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள் என்றும் வினவியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஆதனூரில் மதுக்கடை வேண்டுமென்று கூறுமாறு பெண்களைப் பணம்கொடுத்துஅழைத்துவந்துமாவட்டஆட்சியரிடம் மனு அளிக்க வைத்ததோடு, ஊடகங்களிலும் பேசவைத்துள்ளசெயல்அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது.குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வழியிலிருந்த அரசு மதுபானக்கடையை நாம் தமிழர் கட்சி உறவுகளும், ஆதனூர் பொதுமக்களும் போராடி மூட வைத்த நிலையில், மீண்டும் அதனைத்திறக்கஆளுங்கட்சியினரும்,அதிகாரிகளும்பணம்கொடுத்துஅழைத்துவந்துபேசவைத்துள்ளனர்என்றஉண்மையைஅப்பெண்களேபொதுவெளியில்தெரிவித்திருப்பதுவெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் நடைபெற்றுள்ள இத்தகைய அருவெறுக்கத்தக்க செயலுக்குப் பெயர்தான் திராவிட மடலா? கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறும் திமுக அரசு, டாஸ்மாக் கடைகளில் வைத்து விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? என்ற எனது நெடுநாள் கேள்விக்கு இன்றுவரை திமுக அரசிடம் பதில் இல்லை…