Others
ஜூலை 15 முதல் அக். வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் அக்., மாதம் வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில் 3,768, கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்படும், இதில் நகரங்களில் 43 சேவைகள், கிராமங்களில் 46 சேவைகளை பெறலாம் என்றும், இதில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..