Others
ஜாபர் சேட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி…?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் வக்கீல் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒரு வழக்கில் வாதம் நிறைவு பெற்று தீர்ப்பு வழங்குவதற்காக ஒரு அமர்வு ஒத்திவைத்த நிலையில், மீண்டும் விசாரணைக்காக அதுதொடர்பான வழக்கை வேறு அமர்வு மீண்டும் விசாரிப்பது எப்படி? இது என்ன விதமான நடைமுறை என்பது புரியவில்லை. எனவே இந்த வழக்கு ஒரு தீவிரமான விவகாரமாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இது தொடர்பான வரை முறையை செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..