Others
ஜனாதிபதி –ஐக்கிய நாடு விஜயம்…
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 25 ஆம் திகதி இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார்.ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்கிறார்.