சென்னையை அதிர வைத்த சம்பவம் — துணியில் சுற்றப்பட்டு கிடந்த இளைஞர் …
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு மாற்றுதிறனாளி உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி சேலையூர்போலீசாருக்குதகவல்கிடைத்தநிலையில்விரைந்துசென்றுவிசாரித்தனர்.விசாரணையில் 18 வயது குறைந்த பெண்ணை காதலித்து வந்த அந்த வாலிபர், 3 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது தெரியவந்தது. என்ன நடந்தது ..?சென்னை தாம்பரத்தின் சேலையூரை அடுத்து உள்ள பகுதி மப்பேடு, இங்குள்ள புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு இளைஞர் உடல் கொல்லப்பட்ட நிலையில், கிடப்பதாக சேலையூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு, இளைஞர்ஒருவர்,கழுத்துஅறுக்கப்பட்டு மோசமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.அவரதுஉடல்,ஒருதுணியால்சுற்றப்பட்டிருந்தது. பிரித்து பார்த்தபோது, அவர் மாற்றுத்திறனாளி வாலிபர் என்பதும் கழுத்து அறுக்கப்பட்டு, வெட்டுக்காயத்துடன் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேலையூர் போலீசார் அனுப்பி வைத்ததுடன் விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை
சேர்ந்த 23 வயதாகும் சூர்யா (23) என்பது தெரியவந்தது. இவரது தந்தை இறந்து விட்டார். தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார் என்பது விசாரித்தபோது தெரியவந்தது. இளைஞர் சூர்யா நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்றாராம்.சிறிது நேரம் இருந்து விட்டு வெளியே சென்று வருவதாக தாயிடம் கூறி சென்ற சூர்யா அதன்பிறகு திரும்பவரவே இல்லை. குடும்பத்தினருக்கு புதூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா என்று விசாரித்து வருகிறார்கள்.