fbpx
Others

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்போக்குவரத்து காவல்துறைக்குஉத்தரவு

How will AI cameras fine you for the Road traffic violations in Chennaiரவுடியிசம் கட்டுப்படுத்த ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை ...சென்னையில்சாலைகளில் செய்யப்படும் ஐந்து வகையான விதிமீறலுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மற்ற விதிமுறைமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.அதாவது ஹெல்மெட் வாகனம் ஓட்டினால் கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும். அதிவேகமாக ஓட்டினால், ஸ்டண்ட் செய்வது போல ஓட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். ஒரே வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். கடைசியாக நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தவிர மற்ற விதிமுறை மீறல்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கப்படாமல் ஏஐ கேமரா வழியாக அபராதம் விதிக்கப்படும். 5 அபராதத்திற்கு மட்டுமே நேரடியாக அபராதம் விதிக்க வேண்டும். மற்ற அபராதங்கள் எல்லாம் ஏஐ கேமரா வழியாக தானாக பில் அனுப்பப்பட்டு.. செல்லான் தரப்படும்.சென்னையில் தெருவிற்கு தெரு தற்போது ஏஐ கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஜிஎஸ்டி சாலை, அண்ணா நகரில் ஏஐ கேமரா வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்துக்கு விதிமீறல் சுகாதாரம் தொடர்பான விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.சாலை விதிகளை மீறுபவர்கள், சாலைகளில் வேகமாக ஓட்டுபவர்கள், விதிமீறி குப்பைகளை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் மற்றும் ஆன்லைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.ஏற்கனவே நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதே சமயம் மாநில அரசுகள் ஏற்கனவே வேறு வேறு விதிகளை வைத்து இருப்பதால் அவர்கள் இந்த கீழ்க்கண்ட விதிகளை அமல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இது மத்திய அரசின் பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இந்த அபராதங்கள் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும். 3. சீட் பெல்ட் அணியாதது சீட் பெல்ட்டை அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும். 4. வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். பல மாநிலங்களில் ரூ. 2000 அபராதம்இருந்தது . 6. இரு சக்கர வாகனங்களில் டிரிபிள் ரைடிங் டிரிபிள் ரைடிங் அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 7. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதனுடன் மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது சமூக சேவை செய்ய வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. மீண்டும் விதி மீறினால் ₹4,000 அபராதம் விதிக்கப்படும். 8. மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மாசுபாட்டின் கீழ் (PUC) சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது சமூக சேவையுடன் கூடிய ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். 10. அவசரகால வாகனங்களைத் தடுத்தால் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி கொடுக்க தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும். 11. பொதுச் சாலைகளில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல் பொது சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவோர் அல்லது வேகமாக ஓட்டினால், மீறுபவர்களுக்கு இப்போது உள்ள ₹500க்கு பதில் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். 12. ஓவர்லோடிங் வாகனங்கள் ஓவர்லோடிங் வாகனங்களுக்கான அபராதம் ₹2,000ல் இருந்து ₹20,000 ஆக உயர்ந்துள்ளது. 13. ஜம்பிங் டிராபிக் சிக்னல்கள் சிக்னல் ஜம்பிங்கிற்கான அபராதம் ₹500ல் இருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சிறார்களின் குற்றங்கள் சிறார்களால் (18 வயதுக்குட்பட்ட) போக்குவரத்துக் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அபராதம் ₹2,500ல் இருந்து ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் பாதுகாவலர்/வாகன உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வாகனத்தின் பதிவு ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், மேலும் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close