fbpx
Others

செந்தில் பாலாஜி – ` வெளியே வருவதற்கான வாய்ப்பு ’ கிடைக்குமா ?

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது வேலைவாங்கித்தருவதாகப்பணம்வாங்கியதாகஅவர்மீதுகுற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவழக்குதொடர்ந்துநடைபெற்றுவந்தநிலையில், அவர் திமுகவில்இணைந்துசட்டமன்றஉறுப்பினராகவும், அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தது.இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் அமைச்சராகப் பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டர். கைதுசெய்த சமயத்தில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்தது, பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது எனப் பல்வேறு நிகழ்வுகள் நடந்துமுடிந்தன. சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.வழக்குவிசாரணை,சிறைவாசம்ஒருபக்கம்சென்றுகொண்டிருக்க,   புழல்சிறைக்குமாற்றப்பட்டார்.சிறையிலுள்ளமருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை தொடரப்பட்டது. நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியின் காவல் ஒரு முறை, இரண்டு முறை அல்ல… 48-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.செந்தில் பாலாஜி

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி, இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், அவர் வெளியே சென்று சாட்சியங்களைக் கலைக்கக்கூடும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமாசெய்ததுகுறிப்பிடத்தக்கது.ராஜினாமாசெய்துபலமாதங்கள்ஆகியும்,ஜாமீன்மட்டும்இதுவரைகிடைக்கவில்லை.  சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மனுவைத் தள்ளுபடி செய்திருந்தார். அதேபோல, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் ஜூலை 22-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு விசாரணை நடந்துகொண்டிருக்க, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.ஜாமீன் மீதான மேல் முறையிட்டு மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில் விசாரணை ஜூலை 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக 12-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் மீண்டும் விசாரணையை ஜூலை 22-ம்திஒத்திவைத்துநீதிமன்றம்.
ஒரு வருடத்தைக் கடந்தும் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜிக்கு நிராகரிப்பு மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் நடைபெறுவது என்ன என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள், திமுக-வின் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம். “செந்தில் பாலாஜிக்கு வேண்டுமென்றே ஜாமீன் தராமல் மறுக்கப்படுகிறது. விசாரணைக்கு எங்கள் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறோம். இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களை வேண்டுமென்றே சொல்லி ஜாமீனை நிராகரிக்கிறார்கள். வழக்கு விசாரணையையும் அமலாக்கத்துறை சார்பில் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவே தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஒரு சில பின்னடைவுகளை நாங்கள் சந்தித்தபோதிலும், பல முன்னேற்றங்களையும் கண்டிருக்கிறோம். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
காரணமே இல்லாமல் ஒருவரை எத்தனை நாள் சிறையில் அடைத்துவைக்க முடியும். சமீபத்தில் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதேபோல, நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் சமீபத்தில்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை மிகவும் நல்ல விஷயமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. அவர் கைதாகி ஓர் ஆண்டுக்கும் மேலாகிறது. நடுவில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் செந்தில் பாலாஜி தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணை முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. முன்பைவிட தற்போது ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. அடுத்து வரும் விசாரணையில் கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்கள் .

Related Articles

Back to top button
Close
Close