fbpx
Others

செங்கோட்டையன் — தவெகவுக்கு விரைவில் சின்னம் …

TVK president Vijay alleges negligence by DMK government in paddy  procurement - The Hinduசட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், மேற்கு மண்டல பொறுப்பாளராக பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இன்று காலை ஈரோடு மாவட்டத்தில்தவெகதலைவர்விஜய்தலைமையில்பொதுக்கூட்டம்நடத்தகாவல்நிலையத்தில்கடிதம்அளித்திருந்தார்.இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள செங்கோட்டையன், டிசம்பர் 16ல் ஈரோடுமாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்று மாலை ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மக்களை சந்தித்தார். அப்போதுWay2News Tamil செங்கோட்டையன் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது.. அங்கே கொடி அசைத்து கொண்டிருக்கிறார்கள்.. பிள்ளையார் சுழி போட்டாச்சுஎன்றார்..ஆனால்இப்போதுபிள்ளையார்சுழிபோடவில்லை.. வேறு சுழி போடப்பட்டிருக்கிறது. எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள்ஆனால் மக்களின் சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைப்பார்கள். மக்கள் சக்திக்கு யாராலும் தடை போட முடியாது. இந்த கிராமத்தில் கூடிய கூட்டம் போல், விஜய்க்கு ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டம் கூடுகிறது. ஒவ்வொருகுழந்தையும் பெற்றோரை விஜய்க்கு வாக்கு போட சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளே தான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா?ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள்.. அந்த முகம் கிடைத்துவிட்டது.. என்னை யாராலும் சாய்த்துவிட முடியாது.. சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்துபோவார்கள்..நான்என்றுஒருவன்நினைத்தால்,ஆண்டவன்தான்என்றுகாட்டிவிடுவான்.. மிக விரைவிலேயே தவெகவுக்கு சின்னம் கிடைக்கப் போகிறது. அது எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால் வெளியில் சொல்லக் கூடாது.. அந்த சின்னத்தை பார்த்த பிறகு தான் நாடே வியப்படைய போகிறது.. அஞ்சப் போகிறது.. ஏனென்றால் இந்த சின்னத்தை வெல்வதற்கு இனி தமிழ்நாட்டில் எந்த இயக்கத்தாலும் முடியாது என்று தெரிவித்துள்ளார். தவெக சார்பாக கடந்த மாதமே தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி விண்ணப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close