செங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்-கொலை குற்றவாளியை மடக்கி பிடித்தார்..

செங்குன்றம் அடுத்த சோழவரம் காந்திநகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முத்து பிரகாசம் என்ற ரவுடியை கொலைசெய்த வழக்கில் தண்டையார்பேட்டை கருணாநிதி நாலாவது தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுபாஷ் என்பவர் வெட்டி கொலை செய்தார் .இந்த வழக்கில் சோழவரம்போலீசார்சுபாஷைகைதுசெய்துவழக்குபதிவுசெய்துசிறைக்கு அனுப்பினர்.புழல்சிறையில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பிணையில் வெளியே வந்த சுபாஷ் கடந்த ஒன்பது வருடமாக விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார் இந்நிலையில் நீதிமன்றம் அவரை பிடிக்க பிடியாணை பிறப்பித்தது.இதனால் ஆவடி ஆணையரக கமிஷனர் உத்தரவின்படி செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர். பாலாஜி ஆலோசனையில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையாளர். ராஜா ராபர்ட் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் படி, அங்கு சென்ற தனிப்படை போலீசார்நேற்றுஇரவுதுப்பாக்கிமுனையில்சுற்றிவளைத்துசுபாஷைகைதுசெய்தனர்.இது குறித்து சோழவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிளாஸ் சன் டேவிட் வழக்கு பதிவு செய்து சுபாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.ஒன்பது வருடமாக போலீசுக்கு டிமிக்கு காட்டிய கொலை குற்றவாளி சுபாஷை விரைந்து பிடித்த செங்குன்றம் சரக உதவி ஆணையாளர். ராஜாராபர்ட் மற்றும் தனிப்படை போலீசார் பாஸ்கர், மருதுபாண்டியன், அருணகிரி, பிரபாகரன், பார்த்தீபன்,ஆகியோரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.