Others
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! சிறப்பு செய்தி.

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் புத்தர்ஆலய நிகழ்ச்சி! நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது !! சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சி பர்மா தமிழர் களால்1963 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புத்தர் ஆலயத்தில் குடை ஏற்றுதல் நிகழ்ச்சி வருகின்ற 3 ந் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.23 புத்த பிட்சுகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், வணிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொள்கிறார்கள்.அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.முன்னதாக சனிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. .( படத்தில்: பர்மாவில்இருந்து வந்திருக்கும் புத்தபிட்சுகளுடன் பகுதி வாசிகள் )