Others
சு.வெங்கடேசன் M.P.–மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த..நீங்கள்..?
வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், “பக்கிம்சந்திரருடையவந்தேமாதரம்பாடலைநூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை முதன்முதலில் மெட்டமைத்துப் பாடிய ராவீந்திரநாத் தாகூரே அதற்கு இரண்டு தசாப்தத்திற்கு பின்பு எழுதிய கரே பைரே என்கிற நாவலில் அந்தப் பாடலைப் பற்றி விவாதித்திருக்கிறார். அரசியல் சாசனச் சபை அந்தப் பாடலை மிக விரிவாக விவாதித்து இரண்டு சரணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு , நான்கு சரணங்களை விடுவித்து ஒரு முடிவு செய்தது. இவ்வளவிற்குப் பிறகு இந்த அவையில் இந்தப் பாடலினுடைய 150 வது ஆண்டை விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சித் தரப்பு விரும்பியிருக்கிறது. நீங்கள்எந்தமுழக்கத்திற்குப்பின்னால்திரண்டீர்கள் ? பிரதமர் வந்தே மாதரம் என்ற இந்த முழக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆன்மாவாக அமைந்தது என்றுகுறிப்பிட்டார்,உண்மைதான்.இந்தஒருமுழக்கம்மட்டுமல்ல
,வந்தேமாதரம்என்றமுழக்கத்திற்குஇம்மியளவும்குறைந்ததல்ல ஜெய்ஹிந்த்என்றமுழக்கம்.ஜெய்ஹிந்த்என்றமுழக்கத்திற்கு துளியளவும்சளைத்ததல்லஇன்குலாப்ஜிந்தாபாத்என்றமுழக்கம்.ஒவ்வொருமுழக்கத்திற்குப்பின்னாலும்இலட்சக்கணக்கானவர்கள்திரண்டார்கள். தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ; துப்பாக்கிக் குண்டுக்கு நெஞ்சு காட்டியவர்கள் ; பீராங்கியை வாயில் வைத்துச் சுட்டுத் தள்ளப்பட்டவர்கள் ; குதிரையின்காலடிக்குளம்புகளால் எத்தி உதைக்கப்பட்டவர்கள் ; ஜாலியன் வாலாபாக்கில் பொதுக்கூட்டம் கேட்டவர்கள் ; சிட்டகாங்க் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தவர்கள் ; தண்டிக்குப் போய் உப்புக் காய்ச்சியவர்கள் ; தூத்துக்குடியிலே இருந்துகப்பலோட்டியவர்கள்என்றுஒவ்வொருமுழக்கத்திற்குப்பின்னாலும்இலட்சக்கணக்கானோர் திரண்டார்கள். அது சரி , நீங்கள் எந்த முழக்கத்திற்குப் பின்னால் திரண்டீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.இந்த முழக்கங்கள் எல்லாம் யாருக்கு எதிராக எழுப்பப்பட்டதோ அவர்களுக்குப் பின்னால் நீங்கள் இருந்தீர்கள் . தப்பித் தவறி விடுதலைப் போரில் பங்கெடுத்தால் கூட “ தவறிப் பங்கெடுத்து விட்டேன் ” என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தீர்கள். இந்த முழக்கத்தைக் கடந்த காலத்தில் எழுதியவர்கள் எல்லாம் ,ஏந்தியவர்கள்எல்லாம்விடுதலைப்போராட்டத்தில்பங்கெடுத்தவர்கள். ஆனால் அதற்கு எதிர் திசையில் இருந்துவிட்டு , நீங்கள் இன்றைக்கு இதை விவாதிக்க வேண்டும் சொல்லுகிற போது தான் உங்களது அரசியல் பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது என பாஜக அரசை விமர்சித்தார்இந்த தேசத்தினுடைய அடையாளம் அதன் பன்மைத் தன்மையே , அதனால்தான்ஈஸ்வரஅல்லாதேரேநாம்என்றமுழக்கம்வந்தேமாதரம்என்பதைவிடமேலே எழுந்துவந்தது.என்றைக்காவது நீங்கள் உங்கள் உதட்டில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று சொல்லியிருக்கிறீர்களா ? அதற்குப் பதில் நீங்கள் இன்றைக்கு என்ன செய்கிறீர்கள் ? உங்களது மாநில அரசுகள் சுற்றறிக்கை அனுப்புகிறார்கள் . வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டுமென்று மகாராஷ்டிராமாநிலஅரசுசுற்றறிக்கைஅனுப்புகிறது. அடுத்தவர் உதடு என்ன பாடல் பாட வேண்டுமென்பதை தீர்மானிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை இங்கே நாங்கள் கேட்க விரும்புகிறோம்.காயங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால் காயங்களைக் கிளறுவது தான் உங்களுக்கு இலாபம் தருகிறது என்பதால் , நீங்கள் காயங்களைக் கிளறிக் கொண்டே இருக்கிறீர்கள். இதோ இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், இந்தக் கட்டிடத்திற்குள்ளே 12 திருவுருவச் சிலைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் . யாருடைய சிலைகள் தெரியுமா ? சிவன், விஷ்ணு , பிரம்மா , துர்கா , மிதுனா , மஞ்சுஶ்ரீ ,யோகிணி,லிங்கேஸ்வர்என்ற12திருவுருவச்சிலைகளைவைத்திருக்கிறீர்கள் . ஏன் கிறிஸ்தவம் சார்ந்த திருவுருவச் சிலை ஒன்று கூட உங்களுக்கு கிடைக்கவில்லையா ? திருக்குரானினுடைய திருவுருவ அடையாளம் ஒன்று கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையா ? இந்த தேசத்தின் பன்மைத் தன்மை இந்த அவையிலே கூட எதிரொலிக்கக் கூடாது என்று நினைக்கிற நீங்கள் தேசபக்தியைப் பற்றி எங்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறீர்கள் எனக் கூறினார்.மேலும்,பன்மைத் தன்மை தான் இந்தியா . அதற்கு எதிரான உங்களின் வரலாறு தான் இங்கேயிருந்து திருப்பரங்குன்றம் வரை நீள்கிறது. எல்லோரின் கண்களுக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் தெரிகிறது. ஆனால் உங்கள் கண்களுக்கு தர்ஹாமட்டும்தான்தெரிகிறது.மக்களுக்குத்தேவைபக்தி;உங்களுக்குத்தேவைபகை.எல்லோருக்கும்தேவைஆன்மீகம்;ஆனால்உங்களுக்குத்தேவைகலவரம்எனகுற்றஞ்சாட்டினார்.பக்கிம் சந்திரருடைய இந்தக் கவிதையைப் பற்றி பேசுகிற போது கவியரசு கண்ணதாசன் சொன்ன ஒரு கதையை நான் இங்கே மேற்கோள்காட்டவேண்டுமெனநினைக்கிறேன்.சொர்க்கத்திற்கும் , நரகத்திற்கும் இடையிலே இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது . அந்தச் சுவரை நீ கட்ட வேண்டும் , நான் கட்ட வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் வாதிட்டு விட்டு , கடைசியில் சொர்க்கத்தின் தரப்பிலே இருந்தவர்கள் நாங்கள் வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்று சொன்னார்களாம். உடனே நரகத்தின் தரப்பிலே இருந்தவர்கள் நீ வழக்குத் தொடுத்தால் , உன்னால் வெற்றி பெற முடியாது . ஏனென்றால் தீர்ப்புச் சொல்ல வேண்டியவர் எங்களின் பக்கம் இருக்கிறார் என்று சொன்னார்களாம். இது தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு மிகவும் பொருந்தும். மதுரைக்கு மிக மிகப் பொருந்தும்.நூற்றாண்டுகளாக புண்ணியவான்கள் இங்கே விளக்கேற்றலாம் என்று கல்தூண் எழுதப்பட்டுஅதிலேவிளக்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் நான் புண்ணியவான் அல்ல ; அங்கே விளக்கேற்ற மாட்டேன் என்று சொல்லி ஒருவர் அடம் பிடிக்கிறார். “ உங்கள் தீர்ப்புக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது ” என்பது தான் இந்த அவையிலே இருந்து நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்பும் முக்கியமான விசயம் என்றார்.இது வந்தே மாதரம் பாடலினுடைய 150 வது ஆண்டு என்ற ஆதாரத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணம் முதலிலே எழுதப்பட்டது. நான்கு சரணங்கள் பின்னால் ஆனந்த மடம் நாவலிலே எழுதப்பட்டது. சரியான எழுதப்பட்ட ஆண்டு இல்லை. ஆனால் உங்களுக்கு வேறு ஒரு தேவை இருக்கிறது. அந்தத் தேவை வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் .குறிப்பாக மேற்கு வங்காளத்தினுடைய தேர்தல் உங்களுக்குத் தேவையாகஇருக்கிறது.காலமெல்லாம்உங்களின்தேவைதேர்தலாக