HC மதுரைக் கிளை சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….
NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் திமுகவினர் அவர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இதனால், சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக
போராட்டம் வெடித்துள்ளது. சீமான் – பெரியார்: இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலசெயலாளர்சண்முகம்வெளியிட்டுள்ளஅறிக்கையில்,” சிறந்த சிந்தனையாளர் தந்தைபெரியார்குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்களை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தைபெரியார்,தமிழ்நாடுகண்டநவீனசீர்திருத்தங்கள்பலவற்றிற்கும்முன்னோடியாகஅமைந்தவர்.அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் பரிவார வெறுப்பரசியல் கூட்டமும் அவருடைய சிலையை சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.தற்போதுஅதேபாதையில்,மிகமோசமானஅவதூறுகளைவெளிப்படுத்தியிருகிறார்நாம்தமிழர்கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான்.தந்தை பெரியாரின் வாழ்க்கையும், அவருடைய பேச்சுக்களும் வரலாற்று ஏடுகளில் பதிவானவை. ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களால் தொடர்ந்துவாசிக்கப்பட்டும்,ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் வரக்கூடியவை. அவருடைய கருத்துக்களின் தொகுப்பு இந்தியாவில் நிலவும் சாதிப் படிநிலைச் சுரண்டலுக்கு எதிரானவை என்பதுடன், சமுதாயத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை ஒழித்து, முற்போக்குத் திசையில் பயணிக்க உதவக்கூடியவை. அவதூறு: அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரோடு உடன்பட்டும், முரண்பட்டும் பயணித்துள்ள பொதுவுடைமை இயக்கமோ அல்லது வேறு பல இயக்கங்களோ கருத்துக்களை விமர்சித்துள்ளோமே அன்றி ஒரு போதும் அவதூறு, இழிவான தாக்குதல்களை செய்ததில்லை. ஆனால், பெரியாரை வெறுக்கும் பிற்போக்கு சக்திகள், அவர் பேசியதாக பல்வேறுபொய்களைஇட்டுக்கட்டியும்,அல்லதுகுறிப்பிட்டகருத்துக்கள்பேசப்பட்டபின்னணியைமறைத்தும்,திரித்தும்அவதூறுகளைமுன்வைக்கின்றனர். சீமான்:அதன் மூலம் பெரியாரின் கருத்துக்களை முற்றாக வீழ்த்துவதுடன் தமிழ்நாட்டை பின் நோக்கி இழுத்துச் செல்ல முடியும் எனநினைக்கிறார்கள்.இதுவரைசங்பரிவாரத்தால்செய்யப்பட்டுவந்தஅவதூறுகளைஇப்போது சீமானும்முன்னெடுத்திருப்பதுகண்டனத்திற்குரியது. சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துக்களை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரீகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஜனவரி 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சீமான், தந்தை பெரியார் குறித்துப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதாக கோவை, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வரும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.