சிலம்பம் மலேசிய நாட்டில் சிறப்புமிக்க அங்கீகாரத்தை பெற்றுள்ளது….!
போர்க்கலை சிலம்பம் பயிற்சிக்கான பாசறை மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது.அதற்கான நிலநிதி திரட்டுவதற்கான கலை இரவு வருகின்ற மார்ச்மாதம்14ஆம் தேதி மாலை 6-30 மணியளவில் தொடங்குகிறது.கடந்த 30 வருடங்களாக மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தில் மகாகுரு. முரளிதரன்ஆசான் ஆசியுடன்
போர்க்கலை பாசறை அமைத்து சுரேஷ் ஆசான் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதோடு அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி விளையாட்டுகளுக்கும், அரசு விழாக்களுக்கும் மாணவர்களை தயார் படுத்தி அனுப்பி உள்ளனர்.சிலம்பம் மலேசிய நாட்டில் சிறப்புமிக்க அங்கீகாரத்தை பெற்றுள்ளது.எனவே இந்த பாசறையை மேம்படுத்தவும், அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த மலாக்கா மாநில சிலம்ப போர்க்கலை நிர்வாகம் ஒருசிறந்தஆடுகளத்தை உருவாக்கிஉலகெங்கிலும் உள்ள மாணவர்கள் தங்கி பயிற்சி பெறக்கூடிய அளவிற்கு பிரமாண்டமான குருகுல பாசறை உருவாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்..அதற்கான ஒரு கலை விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தும் வருகிறார்கள்.அந்த விழாவிலே மலேசிய நாட்டின் திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களும், இசை குழுவினரும்,அமைச்சர்கள்,
அரசுஅதிகாரிகள்,சிலம்பமூத்தஆசான்கள்கலந்துகொள்கின்றனர்.இந்தியாவில் தென்தமிழ்நாட்டில் தோன்றிய போர்க்கலை சிலம்பம் என்பது வரலாறு
அத்தகையதாய் தமிழகத்தில் இருந்து உலகசிலம்ப ஆசான்கள்மற்றம் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளர். கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் நடிகர். “புகழ்” சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.