fbpx
Others

சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர்மு.க.ஸ்டாலின்சிறப்பித்தார் .

சிறந்த கைவினைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்வளர்ச்சிக்கழகத்தின்சார்பில்,கைவினைத்தொழிலுக்காகவேதங்கள்வாழ்க்கையைஅர்ப்பணித்துக்கொண்ட65வயதுக்கும்மேற்பட்ட9சிறந்தகைவினைஞர்  களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 9 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.   கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப்பொக்கிஷம்”எனும்விருதுவழங்கப்படுகிறது.கைவினைஞர்களைபாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டுதோறும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் தலா 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.அதன்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.முருகேசன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சொ. ராஜகோபால் (பஞ்சலோக சிற்பம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெ. ராதா (நெட்டி வேலை), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பலராமன் (சுடுகளிமண் சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சொ. நாகமுத்து ஆச்சாரி (மரச்சிற்பம்). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ச. கிருஷ்ணமூர்த்தி (தகட்டு வேலை), திருவள் ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா பீவி (பனை ஓலை பொருட்கள்). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.கிருஷ்ணன் (பஞ்சலோக சிலைகள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. லில்லி மேரி (மூங்கில் பாயில் ஓவியம்) ஆகிய 9 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 8கிராம்தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்   “பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் 12 இலட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் ரூ.50,000/- பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் தகுதிச்சான்றிதழும் கொண்டதாகும்.அதன்படி, 2023-24-ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சீ.வே. ராமகிருஷ்ணன் (உலோக சிற்பம்) மற்றும் கோ. குணசுந்தரி (காகிதக் கூழ் பொம்மைகள்). சி. காத்தான் (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் ரெ. மெய்யர் (சுடு களிமண் சிற்பம்), செங்கல்பட்டுமாவட்டத்தைச் சேர்ந்த கு. ரமேஷ் (மரச்சிற்பம்) மற்றும்ஹ.ஸ்ரீதர்(தேங்காய்ஓடுபொருட்கள்).திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கா. கார்த்திகேயன் (பனை ஓலை பொருட்கள்). கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா. கல்யாணகுமார் (காகித கூழ் பொம்மைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கி.சந்திரசேகரன் (கண்ணாடி கலைப்பொருட்கள்) ஆகிய 9 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் வே. அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சு. அமிர்த ஜோதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close