சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவனதலைவர்.,13 வது ஆண்டு நினைவு நாள்..
சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவன தலைவர். டாக்டர்ஜெ. டேவிட் மேனியல் ராஜ் அவர்களின் 13 வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம்அருகில் உள்ள லட்சுமிபுரம் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்ப கலை கூடம், செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூடம் சார்பாகநடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அவரது உருவப்படத்திற்கு மூத்த ஆசான்கள். கலைமுதுமணி. ஆர். முருககனி, பி. சிவபிரகாசம் முன்னிலையில்மலர்அஞ்சலிசெலுத்தப்பட்டது.சிலம்பபயிற்சியில் ஈடுபட்டஅனைத்துமாணவ,மாணவிகளும்அஞ்சலிசெலுத்தினர்.டாக்டர்.டேவிட்மேனுவேல்ராஜ் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி யியல் கல்லூரி முதல்வராக இருந்தவர்.19 80 ஆம் ஆண்டில் சிலம்ப போட்டிக்கான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசின் விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சிலம்பம் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.அத்தோடு 1995இல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சிலம்பம் காட்சி முறையாக விளையாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.ரஷ்யாவில் நடந்த இந்திய கலாச்சார நிகழ்ச்சி மற்றும் மதுரை, தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிலம்பத்திற்கான ஆய்வுகட்டுரைகளை வாசித்து, பெருமைசேர்த்து, பாராட்டை பெற்றுஇருக்கிறார்.சிலம்பத்தை தமிழ்நாடு முழுவதும் சென்று ஆராய்ந்து பல மூத்த ஆசான்களை நேரில் சந்தித்து சிலம்ப தோற்றம், வளர்ச்சி அனைத்தையும்அறிந்து பல்கலைகழகத்தில் சமர்பித்துஅதற்கு உரிய டாக்டர்.(முனைவர் )பட்டத்தை பெற்றவர். உலகம் முழுதும் சிலம்பம்விதிமுறை விளையாட்டாக பரவி வருவதற்கு முக்கியமான காரணமானவர். டாக்டர். ஜெ. டேவிட் மேனுவல் ராஜ் ஆவார்..
