ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்தஅமித்ஷாவுக்கு‘குஜராத்தில்இருந்துவெளியேற்றப்பட்டவர்நீங்கள்’என்றுபதிலடிகொடுத்துள்ளார் சரத் பவார். மேலும், ‘அவர் தற்போதைய உள்துறை அமைச்சர். அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்சநீதிமன்றத்தால்எவ்வாறுநிர்பந்திக்கப்பட்டார்?’ என்பதை நினைவு கூர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின்மூத்தஅரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் (சரத்சந்திர பவார்) தலைவருமான சரத் பவார் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விஷயங்களைக் கூறி என் மீது தாக்குதல் தொடுத்திருந்தார். நாட்டிலுள்ளஊழல்வாதிகளுக்கு எல்லாம்தலைவன்என்றுஎன்னைஅழைத்திருந்தார்.விநோதமானவிஷயம்என்னவென்றால்,உள்துறைஅமைச்சராகஇருக்கும்அமித்ஷாகுஜராத்தில்சட்டத்தைதவறாகபயன்படுத்தியதற்காகஅந்தமாநிலத்தில்இருந்துவெளியேறும்படிஉச்சநீதிமன்றத்தால்நிர்பந்திக்கப்பட்டார் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்இன்றுஉள்துறைஅமைச்சர்.எனவே,நாம்எங்கேசெல்கிறோம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இந்த நாடு யார் கையில் இருக்கிறதோ அவர்களின் வழியில் தான் மக்கள் வழிநடத்தப்பட்டு தவறான பாதையில்செல்வார்கள்,நாம்இதுபற்றிசிந்திக்கவேண்டும்.இல்லையென்றால்அவர்கள்நாட்டைதவறானபாதையில்எடுத்துச்செல்வார்கள்என்றுநான்100சதவீதம்நம்புகிறேன்”என்றுதெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் (அமித்ஷா)கடந்த2010ஆண்டுசொராபுதீன்ஷேக்என்கவுன்டர்தொடர்பாகஇரண்டுஆண்டுகளுக்குஅவரதுசொந்தமாநிலமானகுஜராத்தில்இருந்துவெளியேற்றப்பட்டார்.2014ம்ஆண்டுஅவர்அவ்வழக்கில்இருந்துவிடுவிக்கப்பட்டார்.முன்னதாக, ஜூலை 21 -ம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த பாஜகவின் மாநாட்டில் பேசிய அமித் ஷா, “அவர்கள் (எதிர்க்கட்சியினர்) ஊழல் குறித்து பேசுகிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் மன்னன் சரத் பவார் தான். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது அவர்கள் எங்களை என்ன குற்றம்சாட்டுவார்கள்? யாராவது ஒருவர்ஊழலைநிறுவனமயமாக்கி இருந்தால் சரத் பவார் அது நீங்கள் தான்” என்று தெரிவித்திருந்தார்.மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.மாநிலத்தில், ஆளும் கூட்டணியான மகாயுகதியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவ சேனா, சரத் பவாரின் மருமகன், அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ்ஆகியவை இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாதி (எம்விஏ) அணியில், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.