fbpx
Others

சத்தியமங்கலம் அருகே தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை…

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஜன.17- சத்தி அருகே தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம், எம்.ஜி.ஆர், நகரைச் சேர்ந்தவர் நாகன் (48) தேங்காய் உரிக்கும் தொழிலாளி, மனைவி தங்கமணி, இவரது மகன் பகவதி (23) வாழை இலை வெட்டும் தொழிலாளி, தந்தை மகன் இருவரும் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் நேற்று மாலை இருவரும் மது அருந்தி விட்டு தங்களது வீட்டில் தகராறில் ஈடுபட்டனர். அதன் பிறகு நாகன் வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த பகவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பகவதியை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இரவு வீடு திரும்பிய நாகனிடம் அருகில் இருந்தவர்கள் மகன் பகவதி தூக்கிட்டு கொண்டதாக கூறியுள்ளனர். இதை கேட்ட நாகன் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் நாகனை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இருவரது பிரேதமும் சத்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தந்தையும், மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

 

Related Articles

Back to top button
Close
Close