fbpx
Others

சத்தியமங்கலம்–அயனிங் கடை தீ பிடித்து எரிந்து நாசம்….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சந்து எண் 10 ல் வசித்து வருபவர் கிருஷ்ணன் இவர் அதே ரோட்டில் மெயின் ரோடு அருகே அயனிங் கடை வைத்து நடத்தி வருகிறார். தினசரி வாடிக்கையாளர்கள் கொடுக்கும் துணிகளை அயனிங் செய்து கொடுத்து விட்டு மாலை வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 3.00 மணியளவில் கடை தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் போலீஸ்காருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் இருந்த கட்டிடங்கள் தப்பியது. இச்சம்பவம் குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close