fbpx
Others

கோவையில் பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்……

கோவை, டிச., 04 :கோவையில்பிரபல  தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் : ஒரு மாணவரின் மூக்கு உடைந்தது ! :கோவை, தடாகம் மெயின் ரோடு கணுவாய் அருகில் உள்ள கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று இரு மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு அதில் ஒரு மாணவருக்கு மூக்கு உடைந்தது, ஒரு மாணவர் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மாணவன் ஒருவர் கூறுகையில், அந்த மாணவர்கள் இருவரும் ஒரு பள்ளி மாணவியை காதலித்ததாகவும், அது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பள்ளியில் மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆகையால் கோவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பள்ளி மீது விசாரணை மேற்கொண்டு மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யவும், பள்ளி முடிந்தவுடன் சில மாணவர்கள் பள்ளிகளுக்கு எதிரே நின்று கொண்டு இவர்களுடைய காதலி வழி அனுப்பி விட்டு தான் இவர்களே வீட்டுக்கு செல்கிறார்கள், ஆகையால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் இருக்கும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Back to top button
Close
Close