fbpx
Others

கோவையில் தனியார் நாளிதழ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

சுந்தராபுரம் SIDCO பகுதி, பொள்ளாச்சி சாலையில் மக்கள் குரல் அலுவலகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது.மிரட்டல் வந்ததும், மக்கள் குரல் அலுவலக மேலாளர்கள் செந்தில் மற்றும் ஷீலா உடனடியாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, சைபர் கிரைம் போலீசார் சென்றனர், மேலும் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, வந்த தகவல் போலி என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மின்னஞ்சல் அனுப்பிய நபர்கள் குறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close